search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் நிலையம்"

    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

    திருவனந்தபுரம்:

    போலீஸ் நிலையம் என்றாலே அங்கே குற்றவாளிகளை மிக கடுமையாக நடத்தும் மன நிலை, அதிக சத்தம் போட்டு மிரட்டுவது போன்றவற்றை சினிமாவிலும், நேரிலும் பார்த்து இருப்போம். ஆனால் காக்கி சீருடை அணிந்தவர்கள் மனதில் ஜாலியான பல விஷயங்கள் ஒளிந்திருப்பது யாருக்கும் தெரிந்திருக்காது. இந்தநிலையில் கேரளாவில் போலீஸ் நிலையத்திலேயே கோழிக்கறி சமைத்து ஆசையாக பரிமாறிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் இலவம்திட்டா போலீஸ் நிலையத்தில் போலீசார் சீருடை அணிந்த நிலையில் கோழிக்கறி குழம்பு, மரவள்ளிக்கிழங்கு களி போன்றவற்றை சமைத்து ருசித்து சாப்பிட்டனர். அத்துடன் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பரப்பினர்.

    அந்த வீடியோவில் கடைக்கு சென்று கோழி இறைச்சியை வாங்கியது முதல் வெங்காயம் வெட்டியது, இஞ்சி பூண்டு உரிப்பது, பின்னர் மசாலா போட்டு சமைப்பது, அவற்றை பரிமாறி சாப்பிடுவது போன்றவை பின்னணி பாடலுடன் சிறப்பாக எடிட் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் அந்த சாப்பாட்டை அதிகாரிகளுக்கு பரிமாறி கொண்டதும், ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டதும் வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தற்போதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமென்ட்களையும் பெற்றுள்ளது. சிலர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு போலீசாரை பாராட்டியும் வருகின்றனர். இந்த சம்பவம் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தது என்று அதை போலீஸ் அதிகாரி ஒருவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    இந்தநிலையில் இந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு தெற்கு மண்டல ஐ.ஜி. நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் 'போலீஸ் நிலையத்தில் பணியில் இருக்கும் போலீசார் எப்படி இந்த வேலையை செய்யலாம். இதை சமூக வலைத்தளங்களில் பரப்பிய காரணம் என்ன?. இதற்கு போலீஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

    • கார்த்தி (25). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
    • அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த செலவடை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் கார்த்தி (25). மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    கள்ளத்தொடர்பு

    அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கார்த்திக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பாக மாறியது.

    இதையடுத்து கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் கார்த்திக்குடன் ஊரைவிட்டு சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    முற்றுகை

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இருவரையும் பிடித்து இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர், ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ளது போக்குவரத்து போலீஸ் நிலையம்.
    • 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ளது போக்குவரத்து போலீஸ் நிலையம். இந்நிலையில் இன்று காலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் போலீஸ் நிலையத்திலிருந்து அலுவலக பணி காரணமாக வெளியில் சென்றனர். அப்போது 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது. அப்போது பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    • மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு வட்டிக்கு பணம் வாங்கினேன்.
    • பஞ்சாயத்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறி வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள டி.வி. பத்தூதர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி அமுதா (40). இவர் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:- நாங்கள் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். அதே ஊரை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு வட்டிக்கு பணம் வாங்கினேன். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தி அசல் வட்டியுடன் சம்பந்தப்பட்ட நபரிடம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன். அந்த நபர் பாண்டு பத்திரத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக குடும்பத்துடன் வெளியூர் சென்று கூலி வேலை செய்து வந்தேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார். அமுதா வெளியூர் சென்ற நேரத்தில் அந்த நபர் வீட்டின் பூட்டை உடைத்து அபகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.இது தொட ர்பாக கடந்த மாதம் 22-ந் தேதி கருவேப்பிலங்குறிச்சி போலீசில் அமுதா புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அந்த நபர் ஊரில் பஞ்சாயத்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறி வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அமுதா மற்றும் அவரது உறவினர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையம் முன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அங்கு வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

    • குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வாகனங்களை நிறுத்துவதற்காக தனி வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • உள்ளாட்சி நிர்வாகம் சீர்படுத்த வேண்டும் என காவல் நிலையத்திற்கு வருவோர் கோரிக்கை விடுத்தனர்.

    சூலூர்,

    சூலூர் காவல் நிலைய வளாகத்தில் குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வாகனங்களை நிறுத்துவதற்காக தனி வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு எப்போதும் 30 கார்கள், 50 பைக்குகளை பார்க்க முடிகிறது.

    சூலூரை சேர்ந்த சிலர் போலீஸ் நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு வெளியூருக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் காவல் நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லை.

    சூலூர் காவல் நிலைய வளாகத்தில் கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையமும் இயங்கி வருகிறது. இங்கு வரும் புகார்தாரர்கள் வாகனங்களை நிறுத்த இடம் தேடி அலைவது வாடிக்கையாக உள்ளது.

    போலீஸ் நிலையத்தின் அருகில் ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் சப் ரிஜிஸ்டர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இங்கு வருபவர்கள் வாகனங்களை காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்வதால் இடப் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே இதனை உள்ளாட்சி நிர்வாகம் சீர்படுத்த வேண்டும் என காவல் நிலையத்திற்கு வருவோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு வருவோர் காவல் நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    • அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • 100-க்கணக்கான லாரிகள் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில், ஜூலை.12-

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அதிக அ ளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் பல்வேறு நடவடிக்கை களை மேற் கொண்டு வருகிறார்கள்.

    இருப்பினும் கனிமவ ளங்கள் கடத்தப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளுக்கும் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. நாகர்கோவில் நகர பகுதியில் காலை நேரங்களில் டாரஸ் லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து புறவழிச்சாலை வழியாக கனிவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

    அப்டா மார்க்கெட்டில் இருந்து புத்தேரி வழியாக லாரிகள் திருப்பிவிடப்பட்டு வருகின்றன. இருப்பினும் காலை நேரங்களில் நாகர்கோவில் நகருக்குள் டாரஸ் லாரிகள் கனிம வளங்கள் கடத்திச் செல்வதாகவும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் 16 டயர் லாரிகளை இயக்குவதால் ரோடுகள் சேதம் அடைவதாகவும் அதிக பாரங்கள் ஏற்றி வரும் வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்கலை சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் டாரஸ் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.

    அதிக பாரம் ஏற்றி வரும் டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் ஒரு சில லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் காலை, மாலை நேரங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு கனிம வளங்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அனுமதி உள்ளதா, அதிக பாரம் ஏற்றி வருகிறார்களா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களில் மட்டும் 100-க்கணக்கான லாரிகள் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில லாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

    அதிக பாரம் ஏற்றி வந்ததாக பறிமுதல் செய்யப் பட்ட லாரிகள் தாலுகா அலுவலகங்களில் நிறுத்தப் படட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட லாரிகளை அந்தந்த போலீஸ் நிலையங்க ளில் நிறுத்தி வைத்துள்ளனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அதிக பாரம் ஏற்றி வந்ததாக 9 லாரிகள் பறிமுதல் செய்யப்பது. அந்த லாரிகள் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் அனைத்தும் கோட்டார் போலீஸ் நிலை யத்தின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட லாரிகள் போக்குவரத்துக்கு இடை யூறாக உள்ளன.

    லாரிகள் அனைத்தும் காட்சி பொருளாக நின்று கொண்டிருக்கிறது. நிறுத்தப் படட்ட லாரிகளின் சக்கரங்களில் இருந்து காற்றுகள் இறங்கி மோசமான நிலையில் காணப்படுகிறது. லாரிகள் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. விபத்துக்கள் நடக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக அந்த போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ள லாரிகளை போலீசார் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தகாத வார்த்தைகள் பேசி பேசியும், மிரட்டல் விடுத்ததாகவும் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
    • 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள நைனாபுதூரை சேர்ந்தவர் சிவராஜன் (வயது 37), வக்கீல்.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற ராஜபிரகாசுக்கும் முன்விரோதம் உள்ளது. இந்த விரோதத்தில் சம்பவத்தன்று சிவராஜன் வீட்டில் இருந்தபோது, ராஜா என்ற ராஜபிரகாஷ், அவரது தாயார் நாகம்மாள், மனைவி முத்துசெல்வி, சதீஷ்குமார் ஆகியோர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது அவர்கள் தகாத வார்த்தைகள் பேசி பேசியும், மிரட்டல் விடுத்ததாகவும் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் சிவராஜன் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி விசாரணை நடத்தினார். தொடர்ந்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுசீந்திரத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • கருங்கல் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    கன்னியாகுமரி :

    கருங்கல் அருகே உள்ள கப்பியறை பனங்குழி சரல்விளையை சேர்ந்தவர் ஈஸ்வரபிரசாத். இவரது மகன் பிரதீபன் (வயது 23). நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன் நகரை சேர்ந்த இருதய ஜேம்ஸ் மகள் மேரி ரோஷினி (21). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    வெவ்வேறு சமூக பிரிவு மற்றும் மதத்தை சார்ந்த இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் நேற்று பிரதீபன் மற்றும் மேரி ரோஷினி ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சுசீந்திரத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் பெற்றோரால் தங்களுக்கு பிரச்சினை ஏற்படலாம் என கருதி கருங்கல் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    கருங்கல் போலீசார் இருவீட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த இருவீட்டாரிடமும் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்க ளுக்கு திருமணம் செய்ய உரிமை உள்ளது என கூறியதோடு பெற்றோரால் அவர்களுக்கு எந்த பிரச்ச னையும் ஏற்படக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

    • மதுப்பழக்கத்தால் நாளடைவில் உடல் தளர்ந்து, மன அழுத்தம் ஏற்பட்டு வாழ்க்கையை வீணடிக்கும் நிலை ஏற்படுகிறது.
    • மகள் முன்பு மது குடித்த அந்த ஆசாமி நாளடைவில் மனைவிக்கும் மது பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது.

    மதுரை:

    'மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு' என்ற விழிப்புணர்வு வாசகம் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டிருப்பதை காணலாம். அதனை பார்த்துக் கொண்டே நாள்தோறும் ஏராளமான கடந்து செல்கின்றனர். மதுவினால் நாடும்... வீடும்... எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என்பதை யோசிப்பதற்கு யாருக்கும் நேரம் இல்லாமல் ஓடுகிறோம்.

    இன்றைய நவீன காலத்தில் மது குடிப்பது பகட்டான விஷயமாகவே கருதப்படுகிறது. அதிலும் இன்று இருபாலரும் ஒன்றாக சேர்ந்து மது குடிக்கின்றனர். ஆண்களுக்கு நிகராக பெரிய பெரிய நகரங்களில் பெண்களும் மது கடைகளில் நிற்பதை காண முடிகிறது. மதுப்பழக்கத்தால் நாளடைவில் உடல் தளர்ந்து, மன அழுத்தம் ஏற்பட்டு வாழ்க்கையை வீணடிக்கும் நிலை ஏற்படுகிறது. மது குடிக்கும் நபர் மட்டும் இதில் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அவரை சார்ந்த நபர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    மதுவினால் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த 9 வயதுடைய மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி இயல்பாக இருக்க முடியாமல் கடந்த சில மாதங்களாக ஒரு வித மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு காரணம் அவரது பெற்றோர்கள் தான்.

    சிறுமியின் தந்தை கூலி தொழிலாளி. வேலை முடித்து வரும் அவர் தினமும் போதையிலையோ அல்லது மது பாட்டிலோடு தான் வீட்டுக்கு வருவது வழக்கம். மகள் முன்பு மது குடித்த அந்த ஆசாமி நாளடைவில் மனைவிக்கும் மது பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது. அவரும் மது குடிக்க பழகிக் கொண்டார். நாட்கள் செல்ல செல்ல இருவரும் வீட்டுக்குள்ளேயே ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். மகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அவர்கள் சிறிதும் கூட யோசிக்கவில்லை.

    மது குடித்துவிட்டு போதை ஏறிய பின்பு கணவன், மனைவி தங்கள் 9 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பல நேரங்களில் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டுள்ளனர். இதனால் அந்த சிறுமி பக்கத்து வீட்டிலோ அல்லது தெருவிலோ தூங்கும் நிலை ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவும் போதையில் பெற்றோர் தங்களது மகளை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர்.

    பெற்றோரின் பொறுப்பு கெட்ட இந்த செயலால் செய்வதறியாது திகைத்த அந்த சிறுமி இறுதியாக அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.

    சிறுமியின் நிலையைப் பார்த்து போலீசாரும் பரிதாபப்பட்டனர். இந்த நிலையில் இந்த தகவல் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவுக்கு தெரியவந்தது. அவர் உடனே குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவித்து சம்பந்தப்பட்ட சிறுமிக்கு வேண்டியவற்றை செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் சோபனா, டயானா ஆகியோர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த அந்த சிறுமியை மீட்டனர். பெற்றோரின் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் கலெக்டர் சங்கீதா போன் மூலம் பேசி ஆறுதல் கூறினார்.

    • பாச போராட்டம் தோல்வி
    • தனக்கு குழந்தைகள் ஒன்றும் தேவையில்லை. அர்ஜுனன் தான் தேவை என பிடிவாதமாக இருந்தார்

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நட்டாலம் இடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 29). இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மோனிஷா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அர்ஜுனன் (27) என்பவருடன் மோனிஷாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. மார்த்தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க செல்கிறேன் என கூறி விட்டு மோனிஷா கள்ளக்காதலனுடன் சுற்றி திரிந்துள்ளார்.

    இந்நிலையில் திடீரென 2 குழந்தைகளையும் அழைத்து சென்று தாயாரின் வீட்டில் விட்டுள்ளார். மார்த்தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க செல்கிறேன் என தாயாரிடம் கூறிவிட்டு சென்ற மோனிஷா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மோனிஷாவின் தாயார் லதா தனது மகளை காணவில்லை என மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரித்த போலீசார், அவரது செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது கேரளாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், மோனிஷாவையும் அவருடன் இருந்த அர்ஜுனனையும் பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது லதா 2 பச்சிளம் குழந்தைகளையும், அழைத்து சென்று கண்ணீ ருடன் மகளை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் மோனிஷா தனக்கு குழந்தைகள் ஒன்றும் தேவையில்லை. அர்ஜுனன் தான் தேவை என பிடிவாதமாக இருந்தார். போலீசார் குழந்தைகளின் நிலை குறித்து யோசிக்கும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால் மோனிஷா வாழ்ந்தால் அர்ஜுனனுடன் தான் வாழ்வேன் என பிடிவாதமாக கூறியதை தொடர்ந்து, வேறு வழியின்றி கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்தனர். தாயாரை பார்த்ததும் குழந்தைகள் கதறி அழுதது. ஆனால் மோனிஷா கண்டுகொள்ளவே இல்லை. இச்சம்பவம் மார்த் தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • யார் அவர்? போலீசார் விசாரணை
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் சாலையோரமாக சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார்.

    அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    அவர் சுமார் 5 அடி உயரம் இருக்கிறார். கருப்பு நிறம் வேட்டியும் சட்டையும் அணிந்து உள்ளார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராம்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வருகிறார்.
    • நேற்று முன்தினம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறு கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வருகிறார்.இவரும் அவரது பக்கத்து ஊரான வாணியம்பாளையத்தை சேர்ந்த நிர்மலா (22) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். நிர்மலாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்றும் ராம்குமார் கடத்தி சென்றதாகவும் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் இது குறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன நிர்மலாவை தேடி வந்தனர். இதற்கிடையில் காணாமல் போன நிர்மலா, ராம்குமார் உடன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×